தமிழக முதல்வரால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பிற மாநில முதல்வர்களால் பிற்பற்றபடுகிறது - கே.என்.நேரு பெருமிதம்

By Velmurugan s  |  First Published Mar 12, 2024, 7:41 PM IST

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் திட்டங்களை மற்ற மாநில முதல்வர்களும் பின்பற்றும் வகையில் சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம் தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீட்டு மனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, 3197 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 475 மாற்று திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்களை வழங்கினார். 

இதே போன்று சேலம் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான டிராக்டர்களை வழங்கிய அவர், சேலம் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பு ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எண்ணத்தில் சிஏஏ அமல் படுத்தபட்டுள்ளது - கார்த்தி சிதம்பரம்

மொத்தமாக 3,720 பயனாளிகளுக்கு சுமார் 26.89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, பட்டா வழங்குவது மட்டுமல்ல அவர்களுக்கு வீடு கட்டி தர முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு இதற்கான நிதியை ஒதுக்க வில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் செய்த பல்வேறு திட்டங்களை குறிப்பாக முதல்வரின் முகவரி, நீங்கள் நலமா, உங்கள் ஊரில் போன்ற திட்டங்கள் மக்களை நோக்கி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் செல்லும் நிலை உள்ளது.

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - ஜெயக்குமார் திட்டவட்டம்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சர் நிறைவேற்றிய திட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்காகவே நிறைவேற்றி உள்ளார். இங்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மற்ற மாநில முதல்வர்களும் பின் பற்றும் வகையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஒரிசா மாநிலத்தில் இருந்து வந்து நேரடியாக பார்வையிட்டு செல்லும் நிலை உள்ளது. 

இதே போன்று மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அனைவரும் கூறிய நிலையில் அதை செயல்படுத்தி, மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றும் வகையில் சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். இவருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

click me!