சேலத்தில் ஓடும் ரயிலில் போலீஸ்காரர் மீது 15 கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல்

By Velmurugan sFirst Published May 13, 2023, 3:15 PM IST
Highlights

சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் காவலர் மீது 15 கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு காவல் பணி செய்து வருகிறார். நேற்று மாலை ஈரோட்டில் இருந்து பணியை முடித்து விட்டு சொந்த ஊரான தாளநத்தத்தில் தனது உறவினரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் வெங்கட் என்பவர் ரயிலில் பயணம் செய்த காவலரிடம் அருகில் அமர முயற்சித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியுள்ளது. இதனால் கோபம் கொண்ட வெங்கட் தனது செல்போன் மூலமாக பொம்மிடியில் உள்ள நண்பர்களுக்கு ரயிலில் ஒருவர் என்னிடம் சண்டையிட்டுள்ளார். அவரிடம் நான் சண்டையிட வேண்டும் எனக் கூறி ஆட்களை வரச் சொல்லி இருக்கிறார். அதன்படி சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பொம்மிடி இரயில் நிலையம் வந்தவுடன் 15 பேர் கொண்ட கும்பல் ரயிலில் ஏறி காவலர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கி அவரை ரயில் பெட்டியில் இருந்து கீழே இறக்கி பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தையால் திட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சட்டை கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட நடைமேடையில் கிடந்தார்.

அரியலூரில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதில் காயம் அடைந்த காவலர் ராஜவேலு இது குறித்து தனது குடும்பத்தினரிடமும் ரயில்வே காவல் துறையினரிடமும் புகார் தெரிவித்து விட்டு உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த சேலம் ரயில்வே காவல் துறையினர் பொம்மிடி பகுதியை சார்ந்த வெங்கட் பொ,மல்லாபுரம் திமுக பேரூராட்சி தலைவி சாந்தி புஷ்பராஜ் இவரது மகன் உதயகுமார் ஆகியோரை விசாரணைக்காக ரயில்வே போலீஸ் சேலம் அழைத்துச் சென்றனர்.

சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை துரிதமாக விரைந்து வந்து காப்பாற்றிய காவலர்

இந்த நிலையில் காவலர் மீது வெறி கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி அவருடைய சட்டையை கிழித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் மீது தாக்குதல் தொடுத்த தி.மு.க போரூராட்சி தலைவி சாந்தி புஸ்பராஜ் மகன் உதயகுமார் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டுள்ளார் இவர் தமிழ்நாடு போலீசாக இருந்து ஒழங்கு நடவடிக்கையாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!