சேலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய பயணிகள் விமான போக்குவரத்து

By Velmurugan s  |  First Published Oct 16, 2023, 9:07 PM IST

மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் சேலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


பறவைகள் போல வானத்தில் பறக்க வேண்டும் என்பது வயது வித்தியாசமின்றி எல்லோருடைய விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்த விமான பயணத்தை மத்திய அரசு உதான் திட்டத்தின் மூலம் மாற்றியமைத்துள்ளது. குறைந்தபட்ச கட்டணத்தில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களும் விமானப் பயணம் மேற்கொள்ள உதான் திட்டம் வழிவகை செய்துள்ளது. 

அதே நேரத்தில் சேலம் போன்ற வளர்ந்து வரும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் பெருநகரங்களுக்கு எளிதில் செல்லும் வாய்ப்பையும் உதான் திட்டத்தின் மூலம் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. எளிய மனிதர்களை விமானத்தில் பறக்கச் செய்யும் அதே நேரத்தில் தொழில்துறை வளர்வதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. சேலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணிகள் விமான சேவை நடைபெறாத நிலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

Latest Videos

undefined

பாஜக தமிழ்நாட்டிற்கு தேவையற்ற சித்தாந்தம் - கருணாஸ் பரபரப்பு பேட்டி

முதல்கட்டமாக பெங்களூர் - சேலம் - கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரில் இருந்து சேலம் வந்த விமானத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோன்று சேலத்தில் இருந்து விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து கொச்சின் செல்லக்கூடிய விமானத்தை கொடி அசைத்து அவர்கள் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கி இருப்பதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

click me!