ஓமலூர் அருகே விபத்து ஏற்படுத்திய போதை ஆசாமிக்கு உதவ வந்த பொதுமக்கள் மற்றும் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதால் பொதுமக்கள் போதை ஆசாமியை தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் அருகே உள்ள குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. சேலத்தில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் டாஸ்மாக் கடைக்கு காரில் வந்து மது குடித்துள்ளார். பின்னர் அதிக போதையுடன் காரை ஓட்டிக்கொண்டு சேலம் நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது கமலாபுரம் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் சாலையில் ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தினார்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் உதவிக்கு ஓடி வந்து தடுப்பு சுவற்றின் மீது ஏறி நின்று கொண்டிருந்த காரை கீழே இறக்க முயற்சி செய்த போது, மது போதையில் காரில் இருந்து இறங்கிய பாலாஜி, பொதுமக்களை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் தகவல் அறிந்து வந்த காவல் துறையினரையும் பாலாஜி ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால், கோபமடைந்த அப்பகுதி இளைஞர்கள், போதை வாலிபரை உதைத்து அடித்து கடுமையாக தாக்கினர்.
கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் உதைத்த விவகாரம்; பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஊராட்சி செயலாளர்
இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் போதை ஆசாமியை மீட்டு ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து, விபத்து ஏற்படுத்தியது குறித்தும், போலீசாரையும் தாக்கிய போதை ஆசாமி குறித்தும் விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D