கண் கலங்க வைக்கும் சம்பவம்! மகனின் கல்லூரி படிப்புக்காக பேருந்து முன் விழுந்து தாய் தற்கொலை.. பகீர் வீடியோ.!

By vinoth kumar  |  First Published Jul 18, 2023, 10:58 AM IST

சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட்டை சேர்ந்தவர் பாப்பாத்தி(39). சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.


மகனின் கல்லூரி படிப்பு செலவிற்கு தேவைப்பட்ட பணத்தை திரட்ட முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டால் அதன்பிறகு அரசு நிவாரண தொகை கிடைக்கும் என நினைத்து சேலம் பேருந்து முன் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட்டை சேர்ந்தவர் பாப்பாத்தி(39). சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் தனியார் பொறியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மகனுக்கும் கல்வி கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இதற்காக அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவவில்லை. இதனால், வேலைக்கு செல்லாமல் மகனுக்கு எப்படி கல்வி கட்டணம் செலுத்துவது என்று தெரியாமல் தாய் மனவேதனையில் இருந்துள்ளார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. 5 மணிநேரம் கரண்ட் இருக்காது.!

இந்நிலையில், பாப்பாத்திக்கு ஒருவர் விபரீத யோசனை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி  காலை சேலம் மாநகர் 2வது அக்ரஹாரம் பகுதியில் ஒடும் தனியார் பேருந்து முன்பு விழுந்து பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். விபத்தில் சிக்கி பாப்பாத்தி உயிரிழந்ததாக நினைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;-  Today Gold Rate in Chennai : ஆடி பொறந்ததும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

இந்நிலையில், அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிர்ச்சி காத்திருந்தது. பாப்பாத்தி தானாகவே ஓடிச் சென்று பேருந்தின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், விசாரணையில், தனது பிள்ளைகளின் எதிர்கால தேவைக்காக பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விபத்து வழக்கு தற்போது தற்கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு நீதிமன்றம் மூலமாக இழப்பீடு வழங்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். 

click me!