சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மது அருந்திவிட்டு அரசுப்பள்ளிக்கு வந்த ஆசிரியரால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குறிப்பிட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி அருகேயுள்ள மலை மாரியம்மன் காலனியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் அறிவழகன் பணி நேரத்திலேயே மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருகை புரிந்ததார்.
இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். விவகாரம் குறித்து தகவல் அறிந்து அப்பள்ளிக்கு உடனடியாக வந்த மாவட்டக்கல்வி அதிகாரிகள் வகுப்பு ஆசிரியர் அறிவழகனை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மது போதையில் இருப்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு அறிவழகனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
9 வயது சிறுவன் கம்பால் அடித்து சித்ரவதை; மனநல காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம்
ஆரம்பப் பள்ளிப் படிப்பை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் அரசு துவக்கப்பள்ளி வகுப்பு ஆசிரியர் பணி நேரத்தில் மது குடித்துவிட்டு பள்ளியிலேயே பாடம் நடத்தாமல் உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் வகுப்பு ஆசிரியர் அறிவழகன் இதற்கு முன்னர் வேறொரு பள்ளியில் பணியாற்றும் போதும் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருகை புரிந்து இரண்டு முறை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மீண்டும் பணிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறியீட்டை தவிற எந்த தடயமும் இல்லை; திருச்சி இரட்டை கொலையில் விழி பிதுங்கும் காவல்துறை