சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந் சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயநாதன் (வயது 32). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற 3 வயது மகனும். 7 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர். விஜயநாதனின் வீட்டு வாசல் அருகே தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
தண்ணீர் தொட்டி எந்த நேரமும் மூடிய நிலையில் தான் இருக்கும். இந்நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் பழுதடைந்ததன் காரணமாக மோட்டார் பழுது பார்க்க கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயநாதனும் வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், மனைவி திவ்யா துணி துவைப்பதற்காக தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்து வைத்து துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அருகில் அவரது மகன் ஹரிசும் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஹரிஷ் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தள்ளான். இதனை கவனிக்காத திவ்யா தொடர்ந்து தனது வேலைகளை செய்துகொண்டு இருந்தார்.
வேலைகளை முடித்த நிலையில் தான் சிறுவன் ஹரிசை காணவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சிறுவன் குறித்து விசாரித்த நிலையில், திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியை சந்தேகத்தில் பார்த்துள்ளார். அப்போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளான். இதனை பார்த்த திவ்யா கதறி துடித்துள்ளார்.
தமிழகத்தில் காலை 7 மணிக்கு டாமாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும் - கிருஷ்ணசாமி எச்சரிக்கை
உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து நீரில் இருந்து சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 3 வயது சிறுவன் தவறுதலாக தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.