சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக ஆற்றில் வெடி மருந்து வீசப்பட்ட நிலையில் ஆற்றுக்குள் நீந்தி குளித்துக் கொண்டிருந்த நபர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த அரவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் மோகன் குமார். இவர் தனது நண்பர் பூபதியுடன் சேர்ந்து சேலம் மாவட்டம் ஆணைப் புலிகாட்டில் உள்ள தனது உறவினரான மாரி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் எடப்பாடி அருகே காவிரி ஆற்றிற்குச் சென்று குறித்துள்ளனர். மோகன் குமார் நீருக்கடியில் நீந்திக் கொண்டிருக்க, பூபதி பாறையில் நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்க வந்துள்ளார். மீன்களை பிடிப்பதற்காக தனது கைகளில் வைத்திருந்த பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தோட்டாக்களை ஆற்றில் வீசியுள்ளார். அப்போது ஆற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்த மோகன் குமார் வெடியின் அதிர்வில் சிக்கி நீருக்கடியிலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
பழனியில் வரதட்சணை கொடுமை தாங்காமல் 3 மாத கர்ப்பிணி உடலில் தீ வைத்து தற்கொலை
இதனைத் தொடர்ந்து மோகன் குமாருடன் ஆற்றுக்குச் சென்ற பூபதி தனது உறவினர்கள் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பூலாம்பட்டி காவல் துறையினர் மோகன் குமாரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வெடிகுண்டு வீசிய மீனவர் பெருமாளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரம்; கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் மனைவி 21 இடங்களில் குத்தி கொலை
மீன் பிடிப்பதற்காக போடப்பட்ட வெடி மருந்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.