தேவாலயங்கள், மசூதிகளை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாத பட்சத்தில் கோவில்களையும் அறிநிலையத்துறையில் இருந்து அரசு விடுவிக்க வேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ சென்டலங்கார சம்பத் குமார் ராமானுஜர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் துணிக்கடையின் புதிய கிளை திறப்பு விழா இன்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்வில் மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சென்டலங்கார சம்பத் குமார் ராமானுஜர் ஜீயர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கடையில் உள்ள பட்டு புடவைகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜ ஜீயர் கூறுகையில், "தமிழகத்தில் இந்து கோவில்கள் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் இஸ்லாமிய, கிருத்துவ தேவாலயங்கள் அறநிலையில் துறை கட்டுப்பாட்டில் இல்லை. தற்போது உள்ள திமுக அரசுக்கு தெம்பும், திராணியும் இருந்தால் அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.
undefined
Crime: தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை; அரியலூரில் பரபரப்பு சம்பவம்
ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் சமம், எல்லோருக்கும் எல்லாமும் என கூறிவரும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. மேலும், இந்து கோவில்களை மட்டும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்துக்களுக்கு அவமானம். இஸ்லாமிய, கிருத்துவ தேவாலயங்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை எனில் இந்து கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதை அரசு பணத்தில் செய்யாமல் கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை வைத்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளன.
மேலும் இந்தியாவில் 3வது முறையாக மோடி பதவியேற்று உள்ளது வரவேற்கத்தக்கது. இந்து தர்மத்தை நிலை நாட்டக் கூடிய மோடி தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்து தர்மத்திற்காக அயராது உழைக்கும் நரேந்திர மோடி மூன்றாவது முறை மட்டுமல்ல தொடர்ந்து பிரதமராக நீடிப்பார். திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக பிரசாரம் செய்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தேர்தலின் போது இந்துக்களை விரிவாக பேசும் தலைவர்கள் கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர் என விமர்சனம் செய்தார்.