மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.. 11 மாவட்டங்களுக்கு3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 15, 2022, 9:37 AM IST

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


 


மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது, இதனால் காவிரியின் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நீர் மறுபுறம் வெளியேற்றப்பட்டு வருகிறது,  நேற்று மாலை 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல நீர்மின் நிலையங்கள் வழியாக 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது இதனால் அதகளவில் நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்: Chennai Power Shutdown: சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. இன்று இந்த பகுதிகளில் 5 நேரம் கரண்ட் இருக்காது..!

காவிரி ஆற்றில் நாளுக்குநாள் வெள்ளம் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து  நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லலாம் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வருவாய்த்துறை , காவல்துறை ,பேரிடர் மீட்பு படை , நீர் வளத்துறை அதிகாரிகள் கரையோர மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்ப கண் மதகுகளிட் ஷட்டர்களை திறந்துவிட பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் நீர் வரத்து வேகமாக உள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்க துணிதுவைக்க, செல்பி எடுக்கவும் தடைவிதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து முக்கிய மதகுகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுகிறது. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே மழை பெய்து வரும் நிலையில் அங்கு நீர் தேவை குறைந்துள்ளது, இதனால் டெல்டா பாசன கால்வாய் களுக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120  கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47  டிஎம்சி ஆக உள்ளது. 

 

click me!