சேலம் தலைவாசல் அருகே லாரியில் கிராவல் மண் கடத்திய நான்கு பேர் கைது

By SG Balan  |  First Published Mar 3, 2024, 12:28 PM IST

புத்தூர் ஏரியிலிருந்து விற்பனைக்காக அரசு அனுமதி இன்றி டிராவல் மண்ணை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கோவிந்தம் பாளையத்தை சேர்ந்த சதாசிவம் என்பவர் கிராவல் மண் கடத்தி விற்பனை செய்வதற்காக லாரிகளில் மண் அள்ளியதும் தெரிய வந்தது.


சேலம் தலைவாசல் அருகே லாரியில் கிராவல் மண் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நத்தக்கரை பகுதியில் தலைவாசல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை என்றனர் அந்த டிப்பர் லாரியில் கிராவல் மண் இருந்தது கண்டறியப்பட்டது.லாரி ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Latest Videos

undefined

விசாரணையில் புத்தூர் ஏரியிலிருந்து விற்பனைக்காக அரசு அனுமதி இன்றி டிராவல் மண்ணை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கோவிந்தம் பாளையத்தை சேர்ந்த சதாசிவம் என்பவர் கிராவல் மண் கடத்தி விற்பனை செய்வதற்காக லாரிகளில் மண் அள்ளியதும் தெரிய வந்தது.

மூளை பவர் ரொம்ப அதிகம்! புதிய தகவல் பரிமாற்ற முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

மகன் ஆனந்த் அம்பானி பேச்சைக் கேட்டு அழுத முகேஷ் அம்பானி; நெகிழ வைக்கும் வீடியோ!

லாரி ஓட்டுனர்கள் நரேஷ் (26), மணிகண்டன் (35)  பெரியசாமி (35) என்பது தெரியவந்தது.மூவரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தலை முறைவாக உள்ள  சதாசிவம், செல்வராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

click me!