சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், தேடப்பட்டு வந்த தமிழக மீனவர் ராஜா உயிரிழந்த நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது.
தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. தமிழக மீனவர்கள் காவிரியும், பாலாறும் கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி சிலர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை மட்டும் காணவில்லை. அவரை அப்பகுதி மக்கள் தேடி வந்தனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த ராஜாவின் உடல் பாலாற்றில் சடலமாக இன்று கரை ஒதுங்கி உள்ளது.
undefined
கிணறு வெட்டும்போது வெடி விபத்து; 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
இது தொடர்பாக தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்திருக்கும் பட்சத்தில் இது தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா விற்ற சிறார்களுக்கு நூதன தண்டனை; அரசு மருத்துவமனையில் 1 மாதம் சேவையாற்ற உத்தரவு
கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், தமிழக மீனவர் உயிரிந்ததைத் தொடர்ந்து மாநில எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலாறு வழியாக கர்நாடகா, தமிழ்நாடு இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.