ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத்தீ மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம் வன அலுவலர், ஆத்தூர் வன அலுவலர், தீயணைப்பு துறை, காவல் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோடைகால தீத்தடுப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் 28 சதவீதம் வனப்பகுதி உள்ளது. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் வனத்தீ முன்னெரிக்கை நடவடிக்கையாக வனத்துறை, தீயணைப்புத்துறை, கிராம பஞ்சாயத்து, வருவாய்த்துறை இணைந்து ஆலோசிக்கப்பட்டது.
வனத்தீயை கட்டுப்படுத்த எளிதில் தீ பற்றும் பொருட்கள் ஏற்காடு எடுத்துச் செல்ல தடை.. விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது தீ தடுப்பு குறித்து வனப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயை கண்காணிக்கும் வகையில் வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கோவை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரும் கைது; காவல் துறை அதிரடி
மலை கிராமங்களில் குப்பைகளை எரிக்க கூடாது. சுற்றுலா பயணிகளின் சாகசங்களால் தீ ஏற்படாமல் இருக்க, சுற்றுலா பயணிகள் கேம்ப் பயர், மலைப் பாதையில் மது அருந்துதல், புகைப்பிடிக்க தடை, உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொது இடத்தில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கோடைகாலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதற்கு வசதியாக ஏற்காட்டில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மழலைகள்
ஏற்காட்டில் வெளியூர் மக்களினால் ஏற்படும் பாதிப்புகளே அதிகம். அதனை தடுக்க வார விடுமுறை நாட்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனுமதி பெற்று சில்வர் லூக் மரங்கள் வெட்டப்படுகிறது. இது கடத்தல் ஆகாது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மரத்தை வெட்டினால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் மலைப்பகுதியில் செல்வோம் கட்டாயம் எழுதி தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது மீறீ எடுத்து செல்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.