சேலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published May 8, 2023, 6:41 PM IST

சேலம் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தால் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நேற்றைய தினம் மின்பராமரிப்பு காரணமாக சேலம் கிச்சிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்நிறுத்தம் (shutdown) செய்யப்பட்டிருந்தது. மாலை சுமார் 6.30 மணி அளவில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது கிச்சிப்பாளையம், காந்தி மகான் தெரு பகுதியில் திடீரென்று ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக மின்சார கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. 

அந்தநேரத்தில் அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முனியப்பன்(வயது 21) என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை உடனடியாக அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

திண்டுக்கல்லில் அனைத்து பாடங்களிலும் செண்டம் எடுத்து தச்சு தொழிலாளியின் மகள் சாதனை

இந்த நிலையில் முனியப்பனின் சடலத்தை அவரது உறவினர்கள் அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல் துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிச்சிபாளையம் காவல் துறையினர்  தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!