சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அஐருகே உள்ள விதாசம்பட்டி முனியப்பன் கோவில் காட்டு வாளைவைச் சேர்ந்தவர் சுபாஷ் இவரது மகன் பரணிதரன் (வயது 15). கந்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இதே போன்று நங்கவள்ளி, கரட்புப்பட்டியைச் சேர்ந்த தகராசு என்பவரது மகன் கிரித்திஷ் (8) கோனு’ர் சமத்துவபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து முடித்துள்ளான்.
தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் உறவினரான சுபாஷின் வீட்டிற்கு கிரித்திஷ் வந்துள்ளார். நேற்று பிற்பகலில் விளையாடச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து மாலையில் பெற்றோரும், உறவினர்களும் இருவரையும் தேடிக் கொண்டிருந்தனர்.
கரூரில் மாயமான சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
அப்போது 2 சிறுவர்களும் விருதாசம்பட்டி கிராமம் முனியப்பன் கோவில் காட்டூர் ஏரியில் குறிக்கச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் ஏரி கரையில் தேடிய பொழுது இருவரின் உடைகள், செருப்பு உள்ளிட்டவை கரையில் கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏரியில் தேடிப் பார்த்த பொழுது 2 சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டது.
சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி நங்கவள்ளி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி தறிக்க சில தினங்களே உள்ள நிலையில், மாணவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Crime: நெல்லையில் ஆண் வேடமிட்டு மாமியரை கொலை செய்த மருமகள்
இந்நிலையில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகையாக தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.