10 மாதம் சிறையில் இருக்கும் அமைச்சரையே காப்பாற்ற முடியாதவர், நாட்டை காப்பாற்ற போகிறாரா? பாஜக கேள்வி

By Velmurugan s  |  First Published Mar 28, 2024, 7:13 PM IST

10 மாதமாக சிறையில் இருக்கும் உங்கள் அமைச்சரை கூட காப்பாற்ற முடியாத தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவை காப்பாற்றுவதாக கூறுவதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் சண்முகநாதன் விமர்சித்துள்ளார்.


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் மாவட்டம், ஆத்தூரில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தனிமையில் இருந்த காதலர்களை மிரட்டி செயின் பறிப்பு; ஆயுதப்படை காவலரை சுத்து போட்டு தூக்கிய போலீஸ்

Latest Videos

கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட தலைவர் சண்முகநாதன் பேசியதாவது: 10 மாதமாக சிறையில் உள்ள அமைச்சரை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், இந்தியாவை புள்ளி கூட்டணி வைத்து காப்பாற்றுவதாக கூறுகிறார். கௌரவர்களாக உள்ள அவர்கள் வெற்றி பெற வேண்டுமா? பாண்டவராக உள்ள நாம் வெற்றி பெற வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.

5 வருசமா உங்கள பாக்கவே இல்லையே; கரூரில் ஜோதிமணியை அலரவிட்ட பொதுமக்கள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இநந்தியா கூட்டணியில் உள்ள முதல்வர்கள், நேர்மையானவர்கள் என்று சொல்லமுடியுமா?. இரண்டு முதல்வர்கள், சிறையில் இருந்து கையெழுத்து போடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

click me!