அவன் 25 பைசா குடுத்தா, நீ 50 பைசா குடு; தேர்தல் பார்முலாவை மேடையில் போட்டுடைத்த அதிமுக மா.செ.

By Velmurugan s  |  First Published Mar 26, 2024, 7:35 PM IST

அதிமுகவுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு மட்டுமே பண வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆத்தூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பேச்சால் சர்ச்சை.


கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்  குமரகுரு  ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். 

Latest Videos

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. எப்படி பொதுமக்களிடம் வாக்கு கேட்பார்கள்? திமுக தேர்தல் அறிக்கை பொய் என சாடினார்.

காத்திருக்க வேண்டாம்: இன்றே ராஜினாமா செய்யுங்கள்; தேனி எங்களுக்கு தான் - அமைச்சர் மூர்த்திக்கு, உதயகுமார் பதிலடி

தொடர்ந்து  அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசும்போது, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் ஆவேசமாக கத்தினார். அன்பாய் இருக்க வேண்டியவர்களிடம் அன்பாக இருப்போம். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவோம் ஏன் என்று சொன்னால் அதிமுக ஒரு கட்டுப்பாடான இயக்கம். விவசாயிகள் நெல் கதிர்களுக்கு உரமிட்டு தண்ணீர் பாய்ச்சி அறுவடை காலத்தில் அறுவடை செய்து பாதுகாத்து வைப்பது போல 20 நாட்கள் கண் விழித்து பாதுகாத்ததால் தான் இவ்வளவு நாள் உழைத்தது வீண் போகாது. 

மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடுனா சண்டை இருக்க தான் செய்யும் பெருசு பண்ணாதீங்க; அண்ணாமலை அன்பு கட்டளை

இல்லையென்றால் நெல் மூட்டையை திருடன் தூக்கிக்கொண்டு போவது போல் ஆகிவிடும். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்தால் எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவும் முடியாது. அதேபோல் யார் ஓட்டு போடுகிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுங்கள்.  25 பைசா கொடுக்கிறார்களா? 50 பைசா கொடுங்கள் என பேசினார். அதேபோல் அதிமுக நிர்வாகிகள் தங்களது பூத் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும். வெளியில் சென்று ஒன்றும் கிழிக்க வேண்டாம் என பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

click me!