பாமக.வும், வேடந்தாங்கல் பறவையும் ஒன்று; அடிக்கடி மாறிவிடுவார்கள் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

By Velmurugan s  |  First Published Mar 23, 2024, 4:43 PM IST

பாமக, வேடந்தாங்கல் பறவை போன்று அடிக்கடி மாறிவிடுவார்கள். தண்ணீர் இருந்தால் வருவார்கள், தண்ணீர் வற்றினால் மாறிவிடுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.


தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தார். அப்போது சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து கட்சியினருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். 

Latest Videos

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி வேடந்தாங்கல் பறவை போல தண்ணீர் வற்றினால் பறந்து விடுவார். தண்ணீர் இருந்தால் வருவார். ராமதாஸ் பாரதிய ஜனதா ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுத்தார். தற்போது அக்கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளார். பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. அதிமுக, கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணிக்கு வருவோரை வரவேற்போம். புது முகங்கள் போட்டியிட்டால் அதிமுக வளரும். நானும் ஆரம்ப காலகட்டத்தில் புதுமுகம் தான்.

அண்ணாமலையல்ல; அந்த இமயமலையே வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி - பொள்ளாச்சி ஜெயராமன்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், டெல்லியில் ஊழல் நடந்திருக்கிறதா இல்லையா என்பது தெரிந்த பிறகு தான் கூற முடியும். ஊழல் நடந்திருந்தால் கைது செய்யலாம். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடைபெற்றதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டு காலமாக எங்கு பார்த்தாலும் ஊழல், போதை கலாசாரம் பெருகி உள்ளது. சேலத்தில் பிரதமர் மோடி பேசியதும் ஆளும் கட்சியை குறிப்பிட்டுதான் என்று விளக்கம் அளித்தார். 

TTV Dhinakaran: தேனி தொகுதியில் களம் காண்கிறார் டிடிவி தினகரன்; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சேலம் தொகுதியில் போட்டியிடும் செல்வகணபதி ஏற்கனவே அதிமுக தொண்டர்களின் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கும் பொழுது திமுக ஒரு தீய சக்தி என்று குறிப்பிட்டார். அந்த கட்சியுடன் சேர்ந்து அதிமுகவிற்கு துரோகம் செய்த செல்வகணபதிக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோல்வி எனும் பாடத்தை புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

click me!