வெள்ளம் பாதித்தபோது வராமல் இப்போது வருவது ஏன்? மோடிக்கு எதிராக சேலத்தில் கருப்பு கொடி போராட்டம்

By Velmurugan s  |  First Published Mar 19, 2024, 4:19 PM IST

சேலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்தி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கெஜல் நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக சேலம் வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.

Latest Videos

குறிப்பாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும், திராவிடர் விடுதலைக் கழகத்தினரும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி மோடியின் சேலம் வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு

மதத்தின் பெயரில் அரசியல் நடத்தும் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்திற்கு வராமல் தற்போது தேர்தல் நேரத்தில் வருகை புரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் அவர்களுக்கு தேவையான நிதி உதவியும் அளிக்காமல் தற்போது தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழகத்திற்கு பலமுறை வருகை புரியும் மோடி உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதே போன்று சேலம் கோட்டை மைதான பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சக்தி அம்மன் வேடமிட்ட சிறுமிகள் பிரதமர் மோடிக்கு சேலத்தில் வரவேற்பு!

தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வந்த மோடி தற்போது நூறு முறை வந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது என்றும் எத்தனை கட்சிளோடு கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் பாஜக நுழைய வாய்ப்பில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் தெரிவித்தார்.

click me!