திமுக போதைப் பொருளை கடத்தி கோடி கோடியாக சேர்த்து வைத்துக் கொண்டு தேர்தலை களம் காண்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் சேலம், கஜல்நாயக்கன்பட்டி தாமரைத் திடலில் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமரின் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
குடும்பத்தை பார்க்க ஆசை ஆசையாக ரயில் வந்த ராணுவ வீரர்; தவறி விழுந்து பரிதாப பலி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற 19ம் தேதி பாரத பிரதமர் மோடி சேலத்தில் நடைப்பெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதற்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் வேட்பாளர்களை கூட பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தலாம். தேதி அறிவிக்கபட்ட 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கட்டண படுக்கையறை - அமைச்சர் தகவல்
திமுகவினர் போதை பொருள் கடத்தி கோடி கணக்கில் சேர்த்து வைத்து தேர்தலில் களம் காண உள்ளனர். திமுகவின் அயலக அணி என்பது அயோக்கியத்தின் உச்சம். போதை பொருள் கடத்தல் அணியாகவே உள்ளது. மத்திய அரசு கொடுத்த நிதியை எப்படி பயன்படுத்தினர் என மாநில அரசின் வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.