குடிநீரில் மலம்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள மிரட்டுவதா? ரஞ்சித் ஆவேசம்

By Velmurugan sFirst Published Jan 13, 2023, 10:19 AM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல் துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்தது. விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அதிரடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள தேநீரகத்தில் இரட்டை குவளை முறை, கோவிலுக்குள் பிற்படுத்தப்பட்டோர் நுழையத் தடை என அடுக்கடுக்கான சாதிய வன்கொடுமைகள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரையில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி

இதனைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆட்சியர், அப்பகுதியில் தீண்டாமை தொடர்பான அனைத்து பிரச்சினைகள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோவிலில் அனைத்து சமூக மக்கள் கலந்து கொண்ட பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!

இந்த பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து மகிழலாம் வாங்க!

வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்” என்று குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை தாங்கள் தான் செய்தோம் என்று ஒப்புக்கொள்ளும் வகையில், காவல் துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

click me!