நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியினை புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி பகுதியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அடுத்த தச்சன்குறிச்சி பகுதியில், புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா, புத்தாண்டை முன்னிட்டு கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் புதிய நெறிமுறைகள் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு 6ம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்றன.
சென்னையில் மாரத்தான் போட்டி; 20,000 போட்டியாளர்கள் பேர் பங்கேற்பு
ஆனால் போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக இரண்டாவது முறையாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டி இன்று (8ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேவாலயம் அருகில் வாடி வாசல் அமைத்தல், மாடுகள் வெயில் படாமல் இருப்பதற்கு பிரத்யேக மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாடுகள், வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்று காலை 8 மணிக்கு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்..! அரசியல் சாசனத்திற்கு விரோதமானது- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான இந்த போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் சுமார் 700 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.