தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகிக்கும் அண்ணாமலைக்கு பதிலாக, மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை அந்த பதவியில் அமர்த்தலாம். ஆளுநரின் பேச்சு அப்படி தான் உள்ளது என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் கவிதா ராமு உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்தேன்.
பொங்கல் தினத்தில் SBI தேர்வு; தேர்வு தேதியை மாற்றி அமைக்ககோரும் தேர்வர்கள்
மாவட்டத்தின் இறையூர் கிராமத்தில் நீர் தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் மிகவும் துரதிஷ்டவசமானது. தற்போது அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குடிநீர் தொட்டியில் கழிவுகளை கலந்த நபர்களை காவல் துறையினர் விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சாதிக்கட்சித் தலைவராக இருப்பதை விடுத்து அனைவருக்கும் பொதுவான தலைவராக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதனை நான் அவரிடமே தெரிவித்துள்ளேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் வாய்ப்பளிப்பார் என்று கருதுகிறேன்.
உறுப்புகளை தானமாக வழங்கி இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை
தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம். அவரது பேச்சும், கருத்தும் அப்படி தான் உள்ளது. அதிமுகவை பொறுத்தளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பின்னரே அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.