புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே மற்றொரு தீண்டாமை கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏரியில் குளித்த பட்டியலின பெண்களை திட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர் மலம் கழித்துள்ளார்.
இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பெருங்காடு கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், குளித்துக் கொண்டிருந்த பட்டியல் சமூகத்துப் பெண்களை, இந்தக் கண்மாயில் குளிக்கக்கூடாது என்று மிரட்டியதோடு, ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முள் காட்டுக்குள் பெண்களின் துணிகளை தூக்கி வீசிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து நாகுடி போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐயப்பன், முத்துராமன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்