கோயிலில் குடும்பத்துடன் கொள்ளை… துரத்தி பிடித்து அடித்துக்கொன்ற கும்பல்… புதுக்கோட்டையில் பரபரப்பு!!

Published : Nov 17, 2022, 05:54 PM IST
கோயிலில் குடும்பத்துடன் கொள்ளை… துரத்தி பிடித்து அடித்துக்கொன்ற கும்பல்… புதுக்கோட்டையில் பரபரப்பு!!

சுருக்கம்

புதுக்கோட்டை அருகே கோயில் ஒன்றில் திருடியதாக 10 வயது சிறுமியை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை அருகே கோயில் ஒன்றில் திருடியதாக 10 வயது சிறுமியை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கிள்ளனூர் பகுதிகளில் இருக்கும் கோவில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி கீரனூரில் உள்ள ஒரு சாலையோர கோயிலுக்கு ஒரு குடும்பத்தினர் வந்து சென்றனர். அவர்கள் ஆட்டோவில் திரும்பி செல்லும்போது, கோவில்களில் இருக்கும் பொருட்களை திருடிச் செல்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த ஊர் மக்கள் ஆட்டோவை துரத்தி பிடித்து, தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க: வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும்… அறிவித்தது தமிழக அரசு!!

இதில் அந்த குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா, மகள் கற்பகாம்பாள், மூன்று மகன்கள் என்பது தெரிய வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி, சிறுமி கற்பகாம்பாள் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக 15 தமிழக மீனவர்கள் கைது.... நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!

அவரது குடும்பத்தினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அந்தப் பகுதிகளில் காணாமல் போன பொருட்களை இவர்கள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்ட காவல்துறையினர் அந்த குடும்பத்தினர் மீதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
டாஸ்மாக் ஊழல்! டெல்லியில் எப்படி ஆம் ஆத்மி தோற்றதோ அதுபோல திமுக தோற்கும்! டிடிவி. தினகரன்!