Court News : விராலிமலை அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

By Dinesh TGFirst Published Oct 14, 2022, 2:08 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலங்குளம் நீர்நிலை பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த லக்ஷ்மணன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொதுநல மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பெரும்பாலும் விவசாய பகுதியைச் சார்ந்த கிராமமாகும். இங்கு மலங்குளம் என்ற பெரிய குளம் உள்ளது இந்த குளத்தின் நீர்தான் இந்த பகுதியில் நிலத்தடி நீராகவும் விவசாயிகளுக்கும் விவசாயம் செய்ய பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் விராலிமலையைச் சேர்ந்த மணிகண்டன், முருகன், கண்ணன் சுப்பிரமணியன் உட்பட பல சேர்ந்து இந்த குளத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக கட்டிடங்கள் வணிக நிறுவனங்கள் கட்டி வணிக பயன்பாட்டிற்கு விட்டு வாடகை வசூல் செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டியிருந்தார்.

தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியே அல்ல.. உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு அறிக்கை: திருப்பி அடித்த நீதிபதிகள்.

இந்த கட்டிடத்தினால் இந்த கண்மாய் நீர் பிடிப்பு பகுதி குறைந்து உள்ளது. இதுகுறித்து புகார் செய்தபோது மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இவர்களது கட்டிடங்களை அகற்ற கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் ஆனால் பண பலமும் அரசியல் பலமும் கொண்ட இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே உயர் நீதிமன்றம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் மலங்குளம் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நீர்நிலை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

click me!