பைக் மீது மணல் லாரி பயங்கர மோதல்.. தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

By vinoth kumarFirst Published Jun 29, 2022, 12:31 PM IST
Highlights

இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்தவர் சித்திக் (30). இவர் தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலுக்கு வந்து விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை சித்திக் ஓட்டினார். அவர்கள் மீமிசல் அருகே உள்ள வெளிவயல் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இதேபோல் ஒரு தனியார் இறால் பண்ணையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பகவான், வேலிமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியசெல்வம் ஆகியோர் வெளிவயல் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வெளிவயல் பாலத்தில் தேவகோட்டையில் இருந்து வேகமாக வந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக சித்திக் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு, பகவான், ஆரோக்கிய செல்வம் மீது மோதியது.

இதையும் படிங்க;- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது.!

இதில், ஆரோக்கிய செல்வம், பகவான், சித்திக்குடன் வந்த நண்பர் உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சித்திக்கை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்திக்கும் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- ஃபுல் மப்பில் வந்து நைட்டில ஓயாத டார்ச்சர்.. வலி தாங்க முடியாததால் கணவரின் தலையில் அம்மிக்கல்லைப்போட்ட மனைவி

இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் திருவாரூரை சேர்ந்த சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- TASMAC: மாஸ்க் இருந்தா தான், இனி மது கிடைக்கும்.. டாஸ்மாக் அதிரடி உத்தரவு - குடிமகன்கள் ஷாக்!

click me!