பிரியாணி வாங்கி சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு... பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு..!

By vinoth kumarFirst Published May 6, 2022, 10:17 AM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது புது வீட்டிற்கு கான்கிரீட் போடுவதற்காக பணி நடைபெற்றது. வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள A1 பிரியாணி கடையிலிருந்த, 40 பிரியாணி பொட்டலங்களை பணியில் இருந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார். 

அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்டு 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிரியாணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது புது வீட்டிற்கு கான்கிரீட் போடுவதற்காக பணி நடைபெற்றது. வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள A1 பிரியாணி கடையிலிருந்த, 40 பிரியாணி பொட்டலங்களை பணியில் இருந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார். 

 வயிற்றுப்போக்கு, வாந்தி

இதனையடுத்து, பிரியாணி சாப்பிட்ட பலருக்கும் இரவு முதல் வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டு நேற்று காலை முதல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்த பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

click me!