ஹோட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 14 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 14 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணி பார்சல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகரில் சித்திரைவேல் என்பவர் நேற்று அவருடைய புதிய வீட்டிற்கு காங்கீரட் போடும் பணி நடைபெற்றது. அப்போது, அங்கு பணிபுரிந்த நபர்களுக்கும், அவரது வீட்டு அருகில் உள்ள உறவினர்களுக்கும் சேர்த்து புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரியாணி கடையில் 40 பிரியாணி பார்சல் வாங்கி சென்றுள்ளார்.
வாந்தி மயக்கம்
இந்த பிரியாணியை சாப்பிட்ட அனைவருக்குமே இரவு 11 மணியளவில் வயிற்று போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. சில பேருக்கு அதிகாலையில் இதுபோன்று தொந்தரவு இருந்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை முதல் 14 பேர் உடல் உபாதைகளுடன் அறந்தாங்கியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்மந்தப்பட்ட உணவுத்திற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். நேற்று சாப்பிட்ட பிரியாணியில் கறி போன்ற கருப்பு துகள்கள் அதிகமாக இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.