புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி 11-வது வார்டில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு துணை தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில், முத்தமிழ் செல்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திடீரென திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் பதவி விலகாமல் அடம் பிடித்து வந்தனர்.
திமுகவை சேர்ந்த கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்தார்.
தமிழகத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 436 பேரூராட்சிகளை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க, இம்மாதம் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, ஆளுங்கட்சியின் போட்டி வேட்பாளர்கள் பலர் களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனால் கூட்டணி கட்சி தலைவர் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர்வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கூட்டணி கட்சியினர் அதிருப்தி
இதனையடுத்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லா விட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். அவரது உத்தரவை ஏற்று, வெற்றி பெற்ற போட்டி வேட்பாளர்கள் சிலர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், பலர் ராஜினாமா செய்யாமல் அடம் பிடித்து வருகின்றனர்.
ராஜினாமா
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி 11-வது வார்டில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு துணை தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில், முத்தமிழ் செல்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திடீரென திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் பதவி விலகாமல் அடம் பிடித்து வந்தனர். இந்நிலையில், திமுகவை சேர்ந்த கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் தமிழ்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்தார்.