
விராலிமலை அருகே ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவிக்கு பதில் முக்கிய கோப்புகளில் கணவர் கையெழுத்து போடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த வடுகப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் திமுக பிரமுகராக உள்ளார். 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி தலைவராக ஜெயலட்சுமி வெற்றி பெற்றாலும் அவரது கணவரே அனைத்து அலுவல் பணிகளையும் பார்ப்பதாகவும், எதற்கும் ஜெயலட்சுமி வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும் கோப்புகளில் ஊராட்சி தலைவரின் கையெழுத்தை அவரது கணவரே போடுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.