நாய் நன்றியுள்ள விலங்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மனிதர்களிடம் கூட காணாத குணம் நாயிடம் உண்டு.
வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை, கடித்துக்கொன்று தனது எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றி விட்டு நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் நன்றியுள்ள விலங்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மனிதர்களிடம் கூட காணாத குணம் நாயிடம் உண்டு. மேலும் நாயிடம் குறும்பும் அதிகம் உண்டு. குறிப்பாக தன்னை வளர்த்த எஜமானர் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் பாம்பு, திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து செய்தியாக வந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் புல் மப்பில் மட்டையான பெண் திடீரென உயிரிழப்பு..!
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயந்த். இவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். வீட்டின் முகப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த நாய் பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது. இதில், நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. அதே நேரத்தில் பாம்பு கடித்ததததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது.
வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாயும் இறந்து கிடப்பதை பார்த்து குடும்பதத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை விட்டு குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு ஜெயந்த் அவருடைய குடும்பத்தினர் பூக்களை தூவி கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்! மகனை மார்போடு அனைத்து காப்பாற்றி உயிரை விட்ட தாய்