பெரம்பலூர் அருகே 2 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் - ஜெயா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயாவின் கணவர் துபாயில் வேலை செய்து வரும் நிலையில் ஜெயா கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது குழந்தைகளுடன் பெண்ணகோணத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்து இருந்துள்ளார்.
முட்டை மேல் அமர்ந்து யோகாவில் உலக சாதனை படைத்த சகோதரிகள்
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த விஜயகுமார் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மின்விசிறியில் ஜெயா தூக்கில் தொங்கியவாறும் அவருக்கு கீழே கட்டிலில் 2 பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய வாறும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை; திருமாவளவன் பெருமிதம்
இது தொடர்பாக மங்கள மேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூவரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஜெயாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் மங்கள மேடு காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணைநடத்தி வருகின்றனர்.