கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்ககூடாது! ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ கண்முன்னே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மகன்

Published : Aug 23, 2022, 10:55 AM ISTUpdated : Aug 23, 2022, 11:05 AM IST
கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்ககூடாது! ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ கண்முன்னே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மகன்

சுருக்கம்

தந்தை கண்முன்னே ரத்த வெள்ளத்தில் மகன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

தந்தை கண்முன்னே ரத்த வெள்ளத்தில் மகன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். இவரது 2வது மகன் பிரவீன்ராஜ்(21). இவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐ.ஐ.டி. மாணவி..!

விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த பிரவீன்ராஜ். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது ஆவின் பால் பண்ணை அருகே சென்ற போது, எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டதில் பிரவீன்ராஜ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அருகே ரோந்து பணியில் இருந்த சண்முகம் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்த்த போது தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அவர் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது. பின்னர் மகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பிரவீன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகன் இறந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;-  கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !

PREV
click me!

Recommended Stories

ஆம்னி பேருந்துக்கு போட்டியாக களம் இறங்கும் அரசு சொகுசு பேருந்துகள்; கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் தகவல்
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன்? தோல்வியில் முடிந்தததால் மகன் விபரீத முடிவு