கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் முனியப்பன் அவரது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேரும் காரில் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அயன்பேரையூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது.
பெரம்பலூர் அருகே இரு லாரிகளுக்கு நடுவே கார் சிக்கி அப்பளம் நொறுங்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் விபத்து
கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் முனியப்பன் அவரது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேரும் காரில் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அயன்பேரையூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது.
4 பேர் பலி
அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி முன்னால் சென்ற கார் மீது வேகமாக மோதியது. இதனால், கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கி கொண்ட கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் முனியப்பன் அவரது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 வயது மகன் கார்முகில் அதிஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்த சிறுவனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.