தோழி மீது தீராத ஆசை.. ஆணாக மாற முயன்ற கல்லூரி மாணவி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

By vinoth kumar  |  First Published Apr 9, 2022, 4:08 PM IST

பெரம்பலூர் மாவட்டம் லாடாபுரம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த 17 வயதான இன்னொரு மாணவி பெரம்பலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். இருவரும் பக்கத்து ஊரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் படிக்கும்போது இருந்தே ஒன்றாகப் படித்து வந்த நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை சென்று ஆணாக மாற முயன்ற பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம் லாடாபுரம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த 17 வயதான இன்னொரு மாணவி பெரம்பலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். இருவரும் பக்கத்து ஊரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் படிக்கும்போது இருந்தே ஒன்றாகப் படித்து வந்த நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை 8 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்ற மாணவிகள், கல்லூரிக்கு போகாமலும், வீட்டுக்கும் திரும்பாமலும் மாயமாகிவிட்டனர். இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு மாணவி பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் சென்னைக்கு சென்று விட்டதாக தெரியவந்தது.

மேலும் சென்னை போரூர் ஓம் சக்தி நகரில் ஒருவரது வீட்டில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்து சென்ற தனிப்படை பெண் போலீசார் இரண்டு மாணவிகளையும் நேரில் விசாரித்தபோது ஆணாக மாறி வரும் மாணவியும் தோழியும் ஒன்றாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்திட முடிவுசெய்து அதற்கு ஏற்றபடி தோற்றத்தில் ஆணாக முழுமையாக மாற்றிக்கொள்ளவே சென்னை வந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் இருவரிடமும் நைசாகப் பேசி பெரம்பலூருக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க;- நண்பனின் கள்ளக் காதலிக்கு பிராக்கிட்.. தனிமையில் அடிக்கடி உல்லாசம்.. கும்மிருட்டில் குளத்து கரையில் பயங்கரம்.

click me!