பெரம்பலூரில் குழந்தை பிறந்த 11வது நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் தாய் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் குழந்தை பிறந்த 11வது நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் தாய் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி ரஞ்சிதா (26). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரஞ்சிதாவை அவரது உறவினர்கள் கடந்த 12-ம் தேதி தலை பிரசவத்திற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து 14-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், ரஞ்சிதாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் காரணாமாக பிறந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. இதனால் அந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்தது. தாய் இறந்தாலும் குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லாதது அவரது உறவினர்களுக்கு சற்றே நிம்மதியை கொடுத்துள்ளது.