தூய்மைப் பணியாளரை தலைவணங்கி பாராட்டிய முதல்வர் எடப்பாடி..! உள்ளம் நெகிழ்ந்து போட்ட ட்விட்..!

By Manikandan S R SFirst Published Apr 28, 2020, 7:35 AM IST
Highlights

தனது தாயாரை இழந்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர் திரு.அய்யாதுரை அவர்கள், தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச் சடங்கு முடிந்ததும் வந்து கொரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இருக்கிறது வி.களத்தூர் கிராமம். இங்கிருக்கும் காவல் நிலையத்தில் அண்மையில் தலைமை காவலர் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வி.களத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டு கிராமம் முழுவதும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. கடந்த 20 வருடங்களாக வி.களத்தூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா தொற்றால் வி.களத்தூர் கிராமம் அதிமாக பாதிக்கப்படவே தூய்மை பணியாளரான அய்யாத்துரை கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.  இந்த நிலையில் அவரது 80 வயது தாயார் வயது மூப்பு காரணமாக கடந்த வாரம் மரணம் அடைந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக உறவினர்கள் பெரும்பாலானோர் இறுதிச் சடங்கிற்கு வரமுடியாத நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியோடு உடனடியாக அவரது தாயின் உடலை அடக்கம் செய்தார்.

தனது தாயாரை இழந்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர் திரு.அய்யாதுரை அவர்கள், தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச் சடங்கு முடிந்ததும் வந்து கொரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது.

மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன். pic.twitter.com/XPtd5t0qrn

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu)

 

பின்னர் சற்றும் தாமதிக்காமல் இறுதிச் சடங்கு செய்த கையோடு தனது கிராமத்தின் நலனுக்காக கொரோனா தடுப்பு பணியில் மீண்டும் அய்யாதுரை ஈடுபடத் தொடங்கினார். தற்போது எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடி இருப்பதால் ஊரின் நலனுக்காக தாயின் உடலை அடக்கம் செய்த சில மணி நேரங்களிலேயே பணிக்கு திரும்பிவிட்டதாக கூறியிருந்தார். இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூய்மைப் பணியாளர் அய்யா துரைக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில், தனது தாயாரை இழந்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர் திரு.அய்யாதுரை அவர்கள், தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச் சடங்கு முடிந்ததும் வந்து கொரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

click me!