ஊரடங்கு காவலுக்கு சென்ற காவலர் ரத்தவெள்ளத்தில் பலி..! விபத்தில் தலை சிதறிய பரிதாபம்..!

By Manikandan S R S  |  First Published Mar 26, 2020, 1:17 PM IST

எதிர்பாராதவிதமாக பிரவிஸ் மீது வாகனம் மோதியதில் அவர் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் பயங்கரமாக மோதினார். மின் கம்பத்தில் மோதியதில் அவரது தலை சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இருக்கிறது அரும்பாவூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பிரவிஸ் காவலராக பணியாற்றி வந்தார் . தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் விதமாக காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

அதன்படி காவலர் பிரவிஸும் இன்று காலையில் வழக்கம்போல பணிக்கு கிளம்பினார். தனது இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் எதிரே வாகனம் ஒன்று வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக பிரவிஸ் மீது வாகனம் மோதியதில் அவர் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் பயங்கரமாக மோதினார். மின் கம்பத்தில் மோதியதில் அவரது தலை சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பிரவிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!