உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன்? தோல்வியில் முடிந்தததால் மகன் விபரீத முடிவு

By Velmurugan s  |  First Published Jul 3, 2024, 3:59 PM IST

 பெரம்பலூரில் உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பெரம்பலூர் மாவட்டம், ரோவர் ஆர்ச் சாலை, முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காரைக்குடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் என்பவர் தனது தாயுடன் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில்  துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் அடிப்படையில் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மதுரையில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அழுகிய நிலையில்  70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியும், 35 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கிய தொங்கிய நிலையிலும், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இறந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தின் மேல் மஞ்சள், குங்குமம், பத்தி, எலுமிச்சை பழம், தர்ப்பைப்புல், ஆரஞ்சு பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும்  சமையலுக்கு பயன்படுத்தப்படும்  மசாலா பொருட்கள், கண்டறியப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகம்; திமுக.வை தகுதி நீக்கம் செய்யுங்கள் - அன்புமணி ஆவேசம்

காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் சடலத்திற்கு அவர் மட்டும்  பூஜை செய்தாரா அல்லது வேறு நபர்கள் இறந்த உடலை வைத்து பூஜை நடத்தினார்களா? அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களாக ஸ்ரீராம் கடன் பிரச்சனையில் இருந்தாக அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்தவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் முழு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!