சொத்தை பிரித்து தரும்படி மகன் சக்திவேல், தொடர்ந்து தந்தை குழந்தைவேலுவிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு மறுத்து வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
பெரம்பலூரில் தந்தையை கொடூரமாக அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல். மார்டன் ரைஸ் மில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும் சங்கவி என்ற மகளும் உள்ளனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் குழந்தைவேலும், ஹேமாவும் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், சொத்தை பிரித்து தரும்படி மகன் சக்திவேல், தொடர்ந்து தந்தை குழந்தைவேலுவிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு மறுத்து வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
சேலம் ஆத்தூரை சேர்ந்த அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக சராமரியாக தாக்கும் காட்சிகள்.
https://t.co/Y8wWpYzfHX
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கிருஷ்ணாபுரத்தில் உள்ள குழந்தைவேலின் வீட்டுக்குள் ஆவேசமாக நுழைந்து சக்திவேல் தந்தை என்றும் பாராமல் பாக்ஸிங்கில் குத்துவது போல முகத்தில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தும் அவரை விடாமல் கொடூரமாக தாக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்துவீட்டார் சக்திவேலை தடுத்து அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: தலைக்கேறிய கஞ்சா போதை! ரோட்ல போறவங்க வரவங்களை வெட்டிய இளைஞர்கள்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
படுகாயமடைந்த குழந்தைவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். தந்தையை மகன் கொடூரமாக அடிக்கும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.
இந்த செய்தி டிஜிபி சங்கர் ஜிவால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சேலத்தில் வைத்து சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிவிட்டு! இரண்டு ஆண்டுகளாக பூ, பொட்டுடன் வலம் வந்த மனைவி!