கேல்வரகு, கம்பு, தினை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை மலேசியாவில் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்த பூலாம்பாடி கிராமத்திற்கு வந்த மலேசியா நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு கழக இணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கிராம விசாயிகளிடம் கலந்துரையாடினார். பின்னர், தொழிலதிபர் பிரகதீஸ்குமாரை அவரது வீட்டிற்கே சென்று மரியாதை நிமித்தமாக சந்திதுப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரஸ்வதி கந்தசாமி, மலேசியாவில் தற்போது வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக தெரிவித்தார். முக்கியமாக உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். ஆகவே மலேசியாவில் கம்பு, கேல்வரகு, தினை, போன்ற சிறுதானிய உணவுப் பொருட்கள் சாகுபடி செய்ய முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார்.
7 மாதமாக மகனிடம் இருந்து அழைப்பு இல்லை! மலேசியாவிலிருந்து மகனை மீட்டு தர பெற்றோர் கோரிக்கை!
இதற்காகவே, மலேசிய தட்பவெப்ப நிலை, நில, நீர் மண் வளம், அங்குள்ள விவசாயிகளின் தொழில் திறன் போன்றவற்றிற்கு ஏற்றவாறு, எவ்விதமான தானியங்களை சாகுபடி செய்யலாம் என்பது குறித்து வேளாண்மை வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காகவே இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார்.
இங்குள்ள வேளாண் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு அதன் முடிவுகள் வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் மலேசிய நாட்டு இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்திய வேளாண் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்து சிறுதானியங்களை சாகுபடி செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்றார். தேவைப்படும்பட்சத்தில் இந்திய வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்களை மலேசியாவுக்கே வரவழைத்து பயிற்சி அளிக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
undefined
இதையும் படியுங்கள்