பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கார் மற்றும் பாலத்தில் மோதி பேருந்த கவிழ்ந்த நிலையில் 18 பேர் காயமடைந்து மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சர்வீஸ் சாலையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி பாதையில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
undefined
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் கன்னியாகுமரி, நாகர்கோவிலிற்கு சுற்றுலா சென்று விட்டு மேல்மருவத்தூர் நோக்கி செல்வதற்காக வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே வந்த போது ஓட்டுநர் தூக்க கலகத்தில் முன் சென்ற கார் மீது மோதி மேம்பாலம் மீது ஏறி பேருந்து கவிழ்ந்தது.
பழனி கோவிலில் தங்க சங்கிலியை உண்டியலில் போட்ட பக்தை; கோவில் நிர்வாகத்தின் செயலால் நெகிழ்ச்சி
இதில் பேருந்தில் பயணம் செய்த 41 பயணிகளில் 15 பேருக்கும், காரில் பயணம் செய்த 3 பேருக்கும் என மொத்தம் 18 பேருக்கு காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடமும், கார் ஓட்டுநர் கிறிஸ்டோபர் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீதியில் பிறந்த நாள் கொண்டாட்டம்; மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அத்துமீறல் - 4 பேர் கைது