பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். உடனே இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். உடனே இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் டிரைவர் மற்றும் உதவியாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்ணுபிரியா.. ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? கொதிக்கும் ஷியாம் கிருஷ்ணசாமி.!
அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற தனியார் சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரை தாண்டி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன், காரில் பயணம் செய்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- மாரடைப்பால் உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்! அலறிய பயணிகள்! 62 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்.!
விபத்தில் காயமடைந்த 5 பேரும் வேறு ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.