திமுகவில் 1 கோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு - ஆவேசமடைந்த அமைச்சர்

By Velmurugan s  |  First Published Apr 5, 2023, 7:04 PM IST

உதகையில் நடைபெற்ற திமுகவில் 1 கோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் ஆவேசமடைந்து அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.


தமிழகம் முழுவதும் திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உதகை ஏடிசி திடலில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கழகத்தின் பவள விழாவையொட்டி நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு துவக்க விழா மாவட்ட செயலாளர் பா.முபாரக் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மாவட்ட செயலாளர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போது மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

Latest Videos

undefined

திருச்சி அருகே  பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 22 மாணவ மாணவர்கள் காயம்

இதனை தொடர்ந்து ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டு நிகழ்ச்சி துவக்கப்பட்ட நிலையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உதகை மின் பொறியாளர் சந்தீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் எவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படலாம் எனவும், அதற்கு அவர் எந்த இடத்தில் என்று கேட்டபோது கடுப்படைந்து அமைச்சர் உடனடியாக மின் இணைப்பை சரி செய்ய வேண்டும் என்றும், நாளை நேரில் சந்திக்க வேண்டும் என கடிந்து கொண்டு செல்போனை துண்டித்தார்.

சாலை ஓரமாக நடந்து சென்றவர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி; பொதுமக்கள் போராட்டம்

click me!