குடும்ப பிரச்சினையில் நபர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published : Mar 09, 2023, 08:53 PM IST
குடும்ப பிரச்சினையில் நபர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சுருக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செருமுள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் கண்ணதாசன்(வயது 45). இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆனதாகவும் சாரதா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தேவர் சோலை காவல்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கண்ணதாசன் மற்றும் மனைவி சாராத இடையே கடந்த இரண்டு நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்ததாகவும், நேற்று இரவு கண்ணதாசன் அளவு கடந்த போதையில் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர், இதனைத் தொடர்ந்து கூடலூர் ஆய்வாளர் அருள் மற்றும் உதவி ஆய்வாளர் பவுலோஸ் மற்றும் ராமேஸ்வரன் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தாக்க வந்த யானை குழந்தையின் அழுகுரலை கேட்டு திரும்பி சென்ற அதிசயம்

கண்ணதாசனிடம் நாட்டுத் துப்பாக்கி வந்தது எப்படி அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது சுடப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் பிறகு தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!