கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவும் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மனம் வேதனை அடைந்த கண்ணதாசன் நேற்று இரவு 12 மணியளவில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு கண்ணதாசன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த செருமுள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்(45). இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவும் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:- ஆறிபோன டீயை கொடுக்கிறாயா? திட்டிய மாமியாரை கதறவிட்டு தீர்த்து கட்டிய மருமகள்.. எப்படி தெரியுமா?
இதனால், மனம் வேதனை அடைந்த கண்ணதாசன் நேற்று இரவு 12 மணியளவில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகள், அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இதையும் படிங்க:- பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க ஒரே நேரத்தில் 2 வயாகரா போட்டு ரெடியாக இருந்த 41 வயது நபருக்கு நேர்ந்த சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக தேவர் சோலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கண்ணதாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனிடம் நாட்டுத் துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்றுகிறது.