வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக கோடை காலம் தொடங்கும் முன்னரே காட்டு யானைகள் ஊருக்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் அடர்ந்த வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு வருவது வழக்கமான ஒன்றுதான்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதம் முன்பு குட்டியுடன் கூடிய ஒன்பது காட்டு யானைகள் அடங்கிய கூட்டம் ஒரு மாத காலம் சுற்றி திரிந்தது. வனத்துறையினர் அதனை கடுமையாக போராடி அடர்ந்த வன பகுதிக்குள் விரட்டினர்,
undefined
கரூரில் ஆடு மேய்த்த சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை
இந்நிலையில் நேற்று இரவு குன்னூர் அருகே உள்ள கிலெண்டல் தனியார் எஸ்டேட் ரன்னிமேடு நாளாம் நம்பர் பகுதியில் ஐந்து காட்டு யானைகள் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று காலை முதலே 5 காட்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னந்தோப்பில் சூதாட்டம்; 3 சொகுசு கார்கள் பறிமுதல், 12 பேர் கைது
காட்டு யானைகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிவதால் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.