கூடலூரில் காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Feb 16, 2023, 7:25 PM IST

காட்டு யானை தாக்கியதில் கூடலூர் பாண்டியார் குடோன் பகுதியைச் சேர்ந்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் இந்த காட்டு பகுதி யானைகள் மற்றும் புலிகள், சிறுத்தைகள் என அனைத்து விலங்குகளும் உள்ள பகுதியாகும்,

கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் தாக்குதலில் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருப்பினும் வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கு மனிதர்கள் உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. 

Tap to resize

Latest Videos

பெரம்பலூரில் கோவில் சிலைகள் உடைப்பு; காவல் துறை விசாரணை

இந்நிலையில் இன்று கூடலூர் அருகே உள்ள பாண்டியார் டேன்டி குடோன் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் (வயது 53) என்பவர் விரகு எடுக்க காட்டு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டினுள் மறைந்திருந்த காட்டு யானை அகஸ்டினை கடுமையாக தாக்கியது. இதில் உடலில் பல இடங்களில் காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடலூர் வனத்துறையினர் மற்றும் கூடலூர் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!