கோடநாடு கொலை கொள்ளை வழக்கு... 3 பேரிடம் சிபிசிஐடி மேற்கொண்ட விசாரணை நிறைவு!!

By Narendran S  |  First Published Feb 7, 2023, 11:36 PM IST

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் மாலை 6.30 மணி அளவில் விசாரணை நிறைவடைந்துள்ளது. 


கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் மாலை 6.30 மணி அளவில் விசாரணை நிறைவடைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை நிகழ்ந்தது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறையில் குளறுபடி!.. ஐஏஎஸ் அதிகாரி தூக்கி அடிக்கப்பட்ட சம்பவம் !!

Latest Videos

undefined

சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனிப்படை போலீசார் 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் சிபிசிஐடி போலிசார் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் 720 தொலைபேசி உரையாடல்கள் வைத்து இதுவரை 48 பேரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இதையும் படிங்க: நாளை முதல் மதுரை கிளை!.. நீதிபதி விக்டோரியா கவுரி செயல்படுவார் - வெளியானது அறிவிப்பு!

இந்த நிலையில்  கோத்தகிரியில் உள்ள கோடநாடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தது தொடர்பாக மணிகண்டனுக்கும், சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைக்காக கர்சன் செல்வம், ஜெயசீலன் ஆகிய மூன்று பேருக்கும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கி இருந்தனர். அதன்பேரில் இன்று காலை 10.30 மணிக்கு கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு வந்த 3 பேரிடமும் சிபிசிஐடி போலிசார் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரமாக நடைபெற்ற இந்த விசாரணை மாலை 6.30 மணி அளவில் நிறைவடைந்தது.

click me!